இதுவரை நான் நடித்ததில் வித்தியாசமான மாறுபட்ட திறன் கொண்ட நடிகை நயன்தாராதான் என்று ஜெயம்ரவி நயனை புகோழோ புகழென்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
புகழ்ச்சிக்கு என்ன காரணம்?
சித்தார்த்தை போலவே ஜெயம்ரவியும் தனது சாக்லேட் பாய் இமேஜை மாற்ற நீண்டகாலமாக போராடிக்கொண்டிருக்கிறார். அந்த முயற்சி காரணமாகத்தான் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் நடித்தார்.
அது ஒர்க்அவுட் ஆனதையடுத்து, சில படங்களில் நடித்தார் ஆனால் அது எடுபடவில்லை. இந்த நிலையில், சமுத்திரகனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள நிமிர்ந்து நில் படம் அவரை ஆக்ஷன் ஹீரோவாக அங்கீகரித்துள்ளது.
அதனால் இதையடுத்து தனது அண்ணன் ஜெயம்ராஜா இயக்கும் தனி ஒருவன் படத்திலும் ஆக்சன் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், நிமிர்ந்து நில் படத்துக்காக இரண்டு வருடங்களாக கடுமையாக போராடினேன். க்ளைமாக்ஸ் சண்டை காட்சியில் மட்டும் 3 மாதங்களாக நடித்தேன். ஒரே சண்டை காட்சியை எடுக்க யாரும் இந்த அளவுக்கு போராடியிருக்க மாட்டார்கள்.
காரணம், கதைப்படி இரண்டு வேடம் என்பதால் ஒவ்வொரு வேடத்திற்கேற்பவும் உடல் கெட்டப்பை மாற்றத்தான் இத்தனை காலஅவகாசம் தேவைப்பட்டது.
மேலும், இப்போது என் அண்ணன் இயக்கத்தில் நடிக்கும் தனி ஒருவன் படத்தில் நயன்தாராவுடன் நடிக்கிறேன்.
இதுவரை நான் நடித்ததில் வித்தியாசமான மாறுபட்ட திறன் கொண்ட நடிகையாக தெரிகிறார்.
அதனால், அவருடன் நடிப்பது புதிய அனுபவமாக இருக்கிறது எனறு சொல்லும் ஜெயம்ரவி, என்னுடன் நடித்த நடிகைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானவர் எந்த நடிகை என்று கேட்டால், நயனைத்தான் சொல்வேன்.
அந்த அளவுக்கு எந்த ஈகோவும் இல்லாமல், சகஜமாக பழகக்கூடிய இயல்பான நடிகை அவர் என்கிறார்.
நயனுக்கு போறபக்கமெல்லாம் அதிர்ஷ்ட காத்துதான் போல இருக்கு...!
0 comments
Post a Comment