Tuesday, 25 March 2014

விஜய் நடிக்கும் புதிய படத்தில் தத்துவ குத்துப் பாடல்..!

துப்பாக்கி படம் ஹிட்டானதை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் - விஜய் கூட்டணி இப்போது பெயர் வைக்காத புதிய படமொன்றை எடுத்து வருகிறது.

இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத். இளம் இசையமைப்பாளரான இவர் விஜய்- முருகதாஸ் என்ற இரண்டு பிரபலங்களோடு கூட்டணி ஏற்படுத்தியிருப்பதால் இசை அமைப்பதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறாராம்.
vijay-padathil-thathuva-kuthu-padal

படத்திற்கு பாடல் எழுதியிருப்பவர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி.

இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் அசத்த இருக்கிறாராம். விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கும் இப்படத்தில் வில்லனாக பெங்காலி நடிகர் தோட்டா ராய் செளத்ரி நடித்து வருகிறார்.

படத்தில் அவர் வெளிநாட்டு தாதாவாக வருகிறாராம்.

ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

மதன் கார்க்கி எழுதிய தத்துவ குத்துப் பாடலுக்கு இசையமைத்து பதிவு செய்துள்ளார். இந்தப் பாடல் சூப்பராக அமைந்துள்ளதாக மதன் கார்க்கியே தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

விஜய் படத்தில் இடம்பெறும் பாடல்களுக்கு சாதாரணமாகவே ஒரு மாஸ் இருக்கும். இப்படத்தில் அனிருத்தின் துடிப்பான இசையும் சேர்ந்துள்ளதால் ரசிகர்கள் பெரிதாக எதிர்பார்ப்பது ஒன்றும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
படம் வெளிவந்து ரசிகர்களை உற்சாகத்தில் கிரங்கடிக்கப்போவது உறுதி என திரையுலகத்தில் பேசப்பட்டு வருகிறது.

0 comments

Post a Comment