கடந்த IPL போட்டியின்போது ஏற்பட்ட சூதாட்ட சர்ச்சை தற்பொழுது விசுவரூபம் எடுத்துள்ளது.
இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த, 2008ல், பிரீமியர், 'டுவென்டி-20' தொடர் துவங்கியபோது, சென்னை அணியின் கேப்டனாக, தோனி நியமிக்கப்பட்டார்.
இவரது சிறப்பான தலைமையில், சென்னை அணி, 2010, 2011ல் சாம்பியன் பட்டம் வென்றது. 2010ல் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்றியது.
தொடர்ந்து, பி.சி.சி.ஐ., தலைவராக இருந்த சீனிவாசனுக்கு சொந்தமான, 'இந்தியா சிமென்ட்ஸ்' நிறுவனத்தின், துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்தச் சூழலில், கடந்த பிரீமியர் தொடரில் வெடித்த சூதாட்ட சர்ச்சையில், சென்னை அணி, வசமாக சிக்கியது. சர்ச்சையை விசாரிக்க அமைக்கப்பட்ட, முத்கல் குழு அறிக்கையில், தோனி உட்பட, ஆறு இந்திய வீரர்கள் பெயர்கள் இடம் பெற்றன.
இதுகுறித்த விசாரணையில், சென்னை அணி உரிமையாளர் தொடர்பாக, தவறான தகவலை தோனி கொடுத்ததாக, புதிய சர்ச்சை கிளம்பியது. இது பற்றி, சுப்ரீம் கோர்ட்டில் விவாதிக்கப்பட்டது.
இதனால், தன், 'இமேஜ்' பாதிக்கப்பட்டதாக தோனி கருதினார்.
இதையடுத்து,பி.சி.சி.ஐ., தலைவர் பதவியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட சீனிவாசனை, தொலை பேசியில் தொடர்பு கொண்ட தோனி, இந்தியா சிமென்ட்ஸ் துணைத் தலைவர் மற்றும் சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து, விலக விரும்புவதாக தெரிவித்து உள்ளார்.
இது ஏற்கப்படவில்லை என்றாலும், இரு தரப்பிலும் விவாதம் நடக்கிறது.கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகுவது உறுதியானால், வரும் ஏப்., 16ல் துவங்கும், ஏழாவது பிரீமியர் தொடரில், சென்னை அணிக்கு பெரும் சிக்கல் ஏற்படும்.
வங்கதேசத்துக்கு எதிராக, நேற்று முன்தினம் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற பின், பத்திரிகையாளர் சந்திப்பில், பதவி விலகல் குறித்து, தோனியிடம் கேட்கப்பட்டது.
அப்போது கூறுகையில், 'இது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கப் போவதில்லை. 'டுவென்டி-20' உலக கோப்பை தொடர் குறித்து மட்டும் கேளுங்கள்' என்றார்.
ஒரு வேளை தோனி விலகி னால், சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு, புதிய கேப்டனாக, ரெய்னாவை நியமிக்க இயலாது. ஏனென்றால் இவரது பெயரும், முத்கல் அறிக்கையில் உள்ளது.
இதனால், தமிழக வீரர் அஷ்வின் அல்லது குஜராத்தை சேர்ந்த, ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து மட்டும் விலக, அனுமதி கேட்டுள்ளார் தோனி.
இந்திய அணியின் கேப்டனாகவும் இருக்கும் இவர், சாதாரண வீரராக, மற்றவரின் தலைமையில் விளையாடுவது கடினம். இதனால், சென்னை அணியில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த தகவல்களை அறிந்த கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு வேளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து தோணி வெளியேறினால் சூப்பர் கிங்ஸ் அணியின் மதிப்பு பாதாளத்தில் சென்றுவிடும்.

0 comments
Post a Comment