Monday, 24 March 2014

காமெடி மட்டுமல்ல... கதாநாயகனாவும் கலக்க முடியும்.. - சந்தானம்

காமெடியனாக கலக்கும் நடிகர்கள், கதாநாயகர்களாக நடித்து கலக்கியதும் உண்டு. அந்த வகையில் ஒரு புதிய ஹீரோவாக உருவெடுத்திருக்கிறார் சந்தானம்.

இவர் நடித்து வெளிவர இருக்கும் படம் "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். பி.வி.பி. சினிமா சார்பில் பியர்ல்.வி.போட்லுரி மற்றும் ஹேண்ட் மேட் ஃபிலிம்ஸ் (Hand made films) தயாரிப்பில் அவர் கதாநாயகனாக நடிக்கும் படம் இது.

இப்படத்தின் First Look ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

vallavanukku-pullum-aayutham-santhanam-hero
இப்படம் குறித்த திரையுலக பிரமுகர்கள் மற்றும் சந்தானத்தின் கதாநாயகர்கள் நண்பர்கள் வட்டத்துக்குள்ளும் இருந்து வரும் பாராட்டு அவரை மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

தான் நண்பனாக நடித்த எல்லா தமிழ் கதாநாயகர்களுக்கும், உண்மையிலேயே நல்ல நண்பனாக இருந்தவர் சந்தானம்.

தற்பொழுது அந்த கதாநாயகர்களே தனது படத்தைப் பற்றிப் பாராட்டுவது அவருக்கு  மிகவும் ஊக்கம் தந்து இருக்கிறதாம்.

தற்பொழுது பார்ப்பதற்கு இருபது வயது இளைஞனைப் போல் இருப்பதற்கு தீவிரமான எடை குறைப்பில் ஈடுபட்டதுதான் காரணம் என கூறும் சந்தானம், இந்தப் படத்துக்காக பிரத்தியேக பயிற்சிகள் மூலம் நடனம் மற்றும் சண்டை பயிற்சியும் மேற்கொண்டு உள்ளார்.

இந்தப் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ கதாநாயகியாக நடிப்பவர் ஆஷ்னா சாவேரி.

இப்படத்தைப் பற்றி படத்தின் இயக்குனரும், நகைச்சுவை நடிகருமான ஶ்ரீநாத் கூறுகையில்,

‘சந்தானத்தின் ஈடுபாடு வியப்புக்குரியது. தான் கதாநாயகனாக நடிக்கும் படம் எந்த வகையிலும் ஜனரஞ்சகத்தில் ஒரு விகிதம் கூடக் குறையக் கூடாது என்ற எண்ணத்தில் எல்லாக் காட்சிகளிலும் ஈடுபாட்டுடன் நடித்து வருகிறார்.

நகைச்சுவையில் கோலோச்சும் சந்தானம் குணசித்திரம், நடனம், சண்டை, காதல் என்று எல்லாக் காட்சிகளிலும் வெளுத்துக் கட்டுகிறார். ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ எல்லா தரப்பு ரசிகர்களைக் கவரும் வண்ணம் தயாரிக்கப்படும் முழுக்க முழுக்க ஜனரஞ்சகமான படமாகும்’ என்கிறார்.

படத்தில் பணியாற்றும் குழுவினர்: இயக்கம் – சாய், இசை – சித்தார்த் விபின், ஒளிப்பதிவு – ஷக்தி, படத்தொகுப்பு – சாய், கலை – A.R.மோகன், ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர் – A.வெங்கடேசன், பாடல் வரிகள் – மதன் கார்க்கி, நா.முத்துக்குமார், நடனம் – ராஜேஷ் கண்ணா, சண்டை – திலீப் சுப்பராயன்.

இந்த படம் வெளிவந்தபிறகு தமிழ்த்திரைபட உலகிற்கு புது கதாநாயகன் கிடைத்திருப்பார் என்கிறது படக்குழு.

0 comments

Post a Comment