"தலைவா" படம் எதிர்பார்ப்புக்கு குறையில்லாம இருக்கு. கதை வழக்கமானதுதான். வில்லன், கதாநாயகன் பழிவாங்கும் கதைதான்.
மும்பையில் தமிழர்களை கொடுமைப்படுத்தி சப்பி சாறெடுக்கிறவன் பத்ரா (வில்லன்). ஒரு வில்லன் இருந்தால் உடனே அவனை எதிர்க்க அங்க கதாநாயகனும் இருக்கனும் இல்லையா?
அந்த கதாநாயகன் நம்ம சத்யராஜ் சார். பத்ராவை எதிர்க்க தமிழர்களின் தலைவனாகி பத்ராவை எதிர்க்கிறார் சத்யராஜ். அதனால் சத்யராஜின் மனைவியை கொன்றுவிடுகிறான் பத்ரா.
உடனே நம்ம கதாநாயகன் சத்யராஜ் பத்ராவை குத்தி பழிக்கு பழி வாங்குகிறார். இந்த நிலைமை தன்னுடைய மகனுக்கும் வரக் கூடாதுன்னு நினைச்சு நாசருடன் அவருடைய மகனை சென்னைக்கு அனுப்புகிறார் சத்யராஜ்.
அவர்தான் நம்முடைய "தலைவா" விஜய். விஜய் ஆஸ்திரேலியாவில் தண்ணீர் சப்ளை செய்யும் தொழில் , டான்ஸ் குரூப் வைத்திருப்பவர். நண்பனாக சந்தானம்.
சந்தானத்தின் லூட்டி படத்தில் தாங்க முடியவில்லை. இவருடைய காமெடி படத்திற்கு ப்ளஸ்.
சந்தானம் வழக்கமான தனது இழுவை கலந்த குரலில் எனக்கு டான்ஸ் புடிக்காது.. ஏன்னா.. எனக்கு டான்சே வராது" போன்ற டயலாக்குகள் சிரிக்க வைக்கின்றன.

கதாநாயகனுக்கு நாயகி அமலாபால். நாயகனுடன் சுற்றி வளைத்து டான்ஸ் ஆடி... காதல் செய்துட்டு... கடைசியா கல்யாணத்துக்காக விஜயோட அப்பாகிட்ட பர்மிசன் வாங்க போகணும்னு கதாநாயகி கேட்க...
கதாநாயகனும் அப்பாகிட்ட பர்மிஷன் கேட்க இந்தியா கிளம்புறார். கூடவே அமாலாபாலும்.. அவருடைய அப்பாவும்..
இங்கதான் டைரக்டர்.. கொஞ்சம்... யோசிக்க வைக்கிறார்...
மும்பைக்கு போன அமலாபாலும்.. அவரோட அப்பாவும்... போலீஸ் ஆபிசருங்க.....
அதாவது விஜயோட அப்பாவை (சத்யராஜ்)பிடிக்கறதுக்காக...இப்படியெல்லாம் வேஷம் போட்டாங்களாம்.
ஒரு வழியா சத்யராஜை கைது செய்து கொண்டுபோக.. போகும்வழியிலேயே அந்த வண்டி குண்டுவச்சி தகர்த்துடறாங்க... சத்யராஜ்.. விஜயோட அப்பா இறந்துடறார்.
அப்பாவோட இறப்புக்கு காரணமானவங்களை கண்டுபிடிச்சு அழிக்கிறதுதான் மீதி கதை...
அப்பாவுக்குப் பதிலாக அந்த மும்பை மக்களுக்கு நம்ம கதாநாயகன் தலைவனா மாறிடறார்..
இதுதான் "தலைவா" கதை...
வேற யாரு யரெல்லாம் இருக்காங்க?
பொண்வண்ணன். இவர் விஜயோட சித்தப்பா கேரக்டர்.. ஆனால் வில்லன்களோட சகவாசம் வச்சிருப்பார்.. வில்லன்களோட சகவாசம் வச்சா என்னாகும்.. கடைசியா இறந்துடுவார்.
படத்தின் ஒவ்வொரு பிரேம்லயும் நம்மை அப்படியே உட்கார வச்சிடாரு ஒலிப்பதிவாளர் நீரவ்ஷா.....
அடுத்து சொல்லணும் இசை... ஜி.வி. பிரகாசோட இசை... பிரமாதம்....
ஒரே வார்த்தையில சொல்லணும்னா...
"தலைவா.....ஆஆஆஆ....!!!!"
படம் நல்லாருக்கு.. எல்லோரும் பார்க்கலாம்.. படத்துல எல்லோரும் சிறப்பா செய்திருக்காங்க...
- "குல்லு" கோகுல்
0 comments
Post a Comment