Friday, 9 August 2013

"தலைவா" ஒரிஜினல் தமிழ் பட விமர்சனம்


தமிழ்நாட்டில் படத்தை வெளியிடலேன்னாலும் எப்படியும் விமர்சனம் எழுதனுங்கிறதுக்காகவே ஆந்திர போய் படம் பார்த்துட்டு வந்து எழுதறேன்.
கதையை ஏற்கனவே முந்தின "தலைவா விமர்சனம்" ல பார்த்துட்டோம். இருந்தாலும் இதை கொஞ்சம் சுவாரஸ்யமா எழுதலாமேனுதான்....

thalaiva-original-movie-review-thalaiva-vimarchanam


இந்த படத்துக்கு "அண்ணா" ன்னு பேர் வச்சதே நான் கம்பூசியஸ் ஆயிட்டேன்.. ச்சீ.. ச்சீ.. கன்பியூஸ் ஆகிட்டேன்.. அப்புறம்தான் தெரிஞ்சது ஆந்திராவில வெளியாகிறதால இதுக்கு "அண்ணா" என்னு பேர் வச்சிருக்காங்க...


இதுக்க முன்னாடி வந்த டான் கதைகள்ள இருந்து கொஞ்சம் "அப்படி இப்படி" கிள்ளி கிளறி... லவட்டின்னு கூட சொல்லலாம்.. எல்லாத்தையும் ஒண்ணா போட்டு அரைச்சு "மை" போல வந்ததும்.. எடுத்து சுட்டிருக்காங்க..

தோசை நல்லாவே வந்திருக்கு.. சும்மா முறுவலான்னு சொல்லுவாங்களே... அதுமாதிரி....

விவரம் தெரியாத வயசிலேயே ஆஸ்திரேலியாவுக்கு வந்துடறாரு விஜய்.. காரணம் அவரோட அப்பா சத்யராஜ் ஒரு மும்பை வாசி.. அங்க இருக்கிற தமிழ்மக்களை காப்பாத்தறதுக்காக.. அவரே ஒரு டான் ஆக மாறிடறார்..  மனைவியை இழந்த வெறியில, வில்லன் பத்ராவ போட்டுத் தள்ளிடறார்..

விஜய்க்கு ஆஸ்திரேலியாவில் செம பிசனஸ்.. அதாங்க தண்ணி விக்கிறது.. தப்பா நினைச்சுக்காதீங்க.. "மினரல் வாட்டர்" விக்கிற தொழிலு.. கூடவே உப தொழிலா டான்ஸ் புரோகிராம் பன்ற வேலை.. டான்ஸ் புரோகிராம் மூலம் கொஞ்சம் கொஞ்சமா ஆஸ்திரேலியாவிலேயே பிரபலமாகிட்டு வருவார்.. நம்ம ஹீரோ....
thalaiva-original-movie-review

அந்த புரோகிராம் மூலமா அறிமுகமாகிறார் ஹீரோயின் அமலாபால்.. சும்மா சொல்ல கூடாது.. அமலாபால்ன்னா அழகு... அழகுன்னா... அமலாபால்தான்...

அவரோட அந்த டான்ஸ் குரூப்ல சேர்ந்து ஒரு டான்ஸ் காம்பெட்டிசன்ல ஜோரா ஜெயிச்சுடறாங்க.... அப்புறமென்ன... ஹீரோ.. ஹீரோயின் கல்யாணம் செய்துக்க விருப்படறாங்க...

இங்கதான் கொஞ்சம்.. டச்சிங் வச்சிருக்காரு இயக்குனர்.. அப்பா ஒரு பிரபலமான தொழிலதிபர்ன்னு நினைச்சிட்டு மும்பை போறாராரு விஜய் அமலாபாலோட...

அங்க போய் பார்த்தான் தெரியுது....அமலாபால் வெறும் காதலி மட்டும் இல்லை... ஒரு பெரிய சிபிஐ ஆபிசர்னு...

சும்மா சொல்லக்கூடாது.. நல்லாவே நடிச்சிருக்காங்க.. அமலாபால்.. ஆனால் சத்யராஜை பாம்பிளாஸ்ட்ல இழந்ததும்.. நம்ம ஹீரோ சார் பொங்கி எழறார்...வழக்கமான விஜய் நடிப்பு.. அவருக்கு ஒரு விசில் போடலாம்.. ரசிகர் பட்டாளம் தியேட்டர்ல எகிறி குதிக்கிறாங்க...

அப்பாவோட பின்னணி, பட்ட கஷ்டத்தையெல்லாம் தெரிஞ்சுகிட்ட விஜய்.. அப்பா விட்ட வேலையை தொடர்ந்து செய்றார்.. மும்மை மாஹி மக்களுக்கு தன்னாலான உதவிகள் செய்கிறார்... அங்க வரவிருக்கிற பிரச்னைகளை தடுத்து நிறுத்தறாரு....

thalaiva-original-movie-review

மக்களுக்கு நல்லத்து செய்துகிட்டே...வில்லன்களை பலி வாங்கறார்... சில இடங்கள்ல  முந்தின தமிழ் சினிமா படங்களை ஞாபகபடுத்தினாலும், பெருசா குறை சொல்ற மாதிரி இல்லை..

மும்பை வீதிகளை முழுசா காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.. அவரோட உழைப்பு ஒரு "ஓ..!" போடலாம்..

இசை பிரமாதம்... நல்லா செய்திருக்கிறாரு இசையமைப்பாளர்.. விஜய்... விஜய்தான்...

இயக்குநர் விஜயும்.. நடிகர் விஜயும் ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க முயற்சி செஞ்சிருக்காங்க...நல்ல "தலைவா" விஜய் இன்னும் சின்ன பையனாகவே மாறியிருக்கிறார்.. வர வர.. அவருக்கு இளைமை கூடிட்டே போகுது.. என்ன ரகசியம்னே தெரியல...

ஒருவேளை வெற்றிப்படம் கொடுக்கிற சந்தோஷமோ என்னவோ.. அவரோட எப்போர்ட் நல்லாவே வேலை செய்யுது.. டாப் மட்டத்துல இருக்கிறவங்களைவிட.. அவரோட ரசிகர்களுக்கு இந்த படம் கண்டிப்பா பிடிக்கும்.. அதில் சந்தேகமே இல்லை..

விஜயோட பிரண்ட் சந்தானம்.. சந்தானம் ஹீரோ ரேஞ்சுக்கு மேல போயிட்டார்ன்னு நினைக்கிறேன்.. எல்லாப் படத்திலேயே புக் ஆகிடறாரே.. அதுதான்... இவர் பன்ற அலப்பறைக்கு கொஞ்சம் சிரிச்சு வக்கலாம்..

முதல் பாதியில விஜயோட கலக்குகிற அமலாபாலும்...அடுத்து அவரோட அப்பாவை கைது செய்யதான் வந்திருக்கிற ஆபிசர்ங்கிற போது கொஞ்சம் "த்ரில்லிங்" கூடுது....

மத்தபடி மற்ற கதாபாத்திங்கள் எல்லோரும் (பெரும்பாலும் புதுமுகங்கள்) நல்லாவே செய்திருக்காங்க...

தமிழ்நாட்ல இந்த படத்துக்கு இருக்கிற எதிர்ப்பை வச்சுப் பார்க்கும்போது.. விஜய் இன்னும் ஒரு படி மேல உயர்ந்திருக்கிறார்ன்னு நம்பலாம்..

ஆக... தலைவா "ஒரு வசூல் ராஜா" ங்கிறது சந்தேகமே இல்லை...!!!

0 comments

Post a Comment