Sunday, 7 July 2013

நடிகை காவேரி ரகசிய திருமணம் - கேரள மாநில வாலிபரை கைபிடித்தார்...!

வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை காவேரி.. அவர் தற்பொழுது டி.வி சீரியல்களில் நடித்து புகழ்பெற்றுக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவருக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் என்பவருக்கும் ரகசிய காதல் மலர்ந்து உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.




சினிமாவில் வருவதுபோலவே இவர்களுடைய காதலுக்கும் பெற்றோர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது.

பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் நடத்த முடியாது என்று முடிவெடுத்த நடிகை காவேரி-ராகேஷ் இன்று காலையில் ரிஷிவந்தியத்தில் உள்ள பிரபலமான அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டனர்.

இது அவர்களுடைய பெற்றோர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தாலும் , காதலர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்திருக்கின்றனர்.

நடிகை காவேரி  பிரபல தொலைக்காட்சிகளில் வரும் முக்கியமான சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை காவேரியின் திருமணம் சினிமா மற்றும் சின்ன திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


0 comments

Post a Comment