பில்லா 2 ரிலீஸை தென்னிந்தியாவே ஆர்வமாக எதிர்பார்க்கிறது. இந்தப் படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் கேரளாவில் வெளியாகிறது.
தெலுங்கில் டேவிட் பில்லா - தி பிகினிங் என்ற பெயரில் பில்லா 2 வை வெளியிடுகின்றனர். அதேபோல் கன்னடத்திலும் படம் வெளியாகிறது. கேரளாவிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட உத்தேசித்துள்ளனர்.
இதில் கேரளா திரையரங்கு உரிமை, தொலைக்காட்சி உரிமை இன்னும் விற்பனையாகவில்லை. தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழக திரையரங்கு உரிமைகளில் மட்டும் 41 கோடிக்கு மேல் சம்பாதித்திருக்கிறது இப்படம். ரிலீஸுக்கு முன்பு அஜீத் படம் ஒன்று இவ்வளவு பெரிய தொகையை கலெக்ட் செய்திருப்பது இதுவே முதல்முறை.
சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இப்படம் ஜூன் மாதம் திரைக்கு வருகிறது.

0 comments
Post a Comment