சுந்தர் சி இயக்கும் "மசாலா கபே' படத்துக்காக இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமரை காட்டியிருக்கிறார் ஓவியா. அதிக கிளாமர் குறித்து அவரிடம் கேட்ட போது, "" "களவாணி', "மெரினா' ஆகிய இரு படங்களுமே எனக்கு நல்ல பெயரை பெற்று தந்திருக்கிறது.
நல்ல நடிகை என பெயர் எடுத்திருக்கிறேன். ஆனால் அது மட்டுமே இப்போது போதாது. காரணம் தமிழ் சினிமாவில் நிலவி வரும் போட்டி. இப்படிதான் நடிப்பேன் என சொல்லிக் கொண்டே நிறைய பட வாய்ப்புகளை விட்டு விட்டேன். சரி நடித்துதான் பார்ப்போம் என ஒப்புக் கொண்ட படம்தான் "மசாலா கபே'. ஒரே ஒரு பாடலில் மட்டும்தான் கவர்ச்சியாக வருகிறேன்.
என்னுடன் சேர்ந்து நடிக்கும் அஞ்சலியும் அப்படிதான் வருகிறார். மற்றபடி இது காமெடி படம். என் எல்லை என்ன என்பது எனக்குத் தெரியும். அதை எந்நாளும் மீற மாட்டேன். "மசாலா கபே' படமும் ஓவியாவை தனித்து காட்டும்'' என்கிறார்.
0 comments
Post a Comment