Saturday 10 May 2014

உலகை கலக்கிய கவர்ச்சி கன்னிக்கு 36-வது பிறந்தநாள்!

தமிழக ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து பத்தாண்டுகளுக்கும் மேலாக கவர்ச்சி கன்னியாகவே இருந்து வருபவர் நடிகை நமீதா.

எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அடியெடுத்து வைத்த நமீதா, தமிழ் ரசிகர்களை மட்டுமின்றி, உலக ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாகவே பார்க்கப்படுகிறார்.

வியாபாரி, பாண்டி, ஏய், பச்சகுதிர போன்ற படங்களில் நடித்து, இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் இவர்.

ulaga-kavarchi-alagi-nameetha-36-birthday


தொடர்ந்து சினிமா உலகில் முத்திரை பதித்த இவர் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து, அங்குள்ள சினிமா ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய படங்களில் மட்டுமல்லாது, எரிக் மேனிங் இயக்கிய மாயா என்ற ஆங்கிலப் படத்திலும் இவர் நடித்துள்ளார்.

உலக ரசிகர்களை தனது கவர்ச்சியால் கட்டிப்போட்ட நமீதாவுக்கு  இன்று 36 வது பிறந்தநாள். றார்.

தற்போது திரைப்படங்களில் நடித்து வருவதுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.

இவர் சொல்லும் "மச்சான்ஸ்" என்ற வார்த்தைக்கு மயங்காத மகுடிகளே இல்லை.

நமிதா 1981 ஆம் வருடம் மே 10 ஆம் தேதி குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்தார். அவரின் முழுப்பெயர் நமிதா கபூர். இவர் 2001 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments

Post a Comment