போட்டி என்று வந்துவிட்டால், எப்படியாவது ஜெயிக்கும் வழியைதான் பார்க்கணும். அந்த வகையில் கவர்ச்சியே காட்டமாட்டேன் என்று சொல்லி டைரக்டர்களை மிரட்டி வந்தார் லட்சுமி மேனன்.
அவரது மிரட்டலுக்கு பயந்து டைரக்டர்களை அடுத்த வார்த்தை பேசாமல் இருந்துவிடுவார்கள். அந்த அளவுக்கு கவர்ச்சிக்கு தான் ஜென்ம எதிரி போன்று தன்னை வெளிப்படுத்தி வந்தார் லட்சுமிமேனன்.
ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. விஷாலுடன் நடித்துள்ள நான் சிகப்பு மனிதன் படத்தில், இன்னொரு நாயகியாக நடிக்கும் இனியாவின் கவர்ச்சி தாக்கம் அதிகமாக இருப்பதால், எங்கே தன்னுடைய மார்க்கெட் சரிந்துவிடுமோ என்ற பயம் வந்துவிட்டது.
அதனால் தன்னை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக, கவர்ச்சிக்கதவுகளை ஓப்பன் பண்ணி விட்டிருக்கிறார் லட்சுமிமேனன்.
அதன் எதிரொலியாக பாண்டியநாடு படத்தை விடவும் விஷாலுடன் ஓவர் நெருக்கம் காட்டியிருப்பவர், படம் முழுக்க மாடர்ன் காஸ்டியூமில் கலக்கியிருக்கிறாராம்.
அதோடு, விஷாலுடன் ஒரு காட்சியில் தண்ணீருக்கு அடியில் முங்குவது போன்று ஒரு செமத்தியான காட்சி உள்ளதாம்.
அதில் லட்சுமிமேனனின் கட்டுப்பாட்டையும் மீறி அவரது கவர்ச்சி வெளிப்பட்டுள்ளதாம்.
இந்த செய்தி கோலிவுட்டில் வேகமாக கசிந்ததையடுத்து, லட்சுமிமேனனும் கவர்ச்சி கட்சியில் சேர்ந்து விட்டார் என்று, அவரை மனதில் கொண்டு கதை பண்ணியிருக்கும் இயக்குனர்கள், இப்போது சில கிளாமர் காட்சிகளையும் எக்ஸ்ட்ராவாக ஸ்கிரிப்டில் இணைத்து வருகிறார்கள்.
கவர்ச்சி காட்டிய நடிகைகளே காணாமல் போகும்போது, கவர்ச்சியே காட்டமாட்டேன் என்று சொன்னால் சினி பீல்டில் நிலைக்க முடியுமா என்ன?
சினீமா சூட்மங்களை லட்சுமி மேனனும் கற்றுக்கொண்டார் போல.. இனி லட்சுமி மேனன் கவர்ச்சி வெள்ளித்திரையில் ஒளிரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.
0 comments
Post a Comment