Saturday, 15 March 2014

உண்மையாகவே கோச்சடையான் அனிமேஷன் படமா?

பொதுவா நம் இந்தியர்களுக்கு அனிமேஷன் படம் என்றால் அது அவதாஸ், டின் டின் போன்ற படங்களையே எண்ணுகிறார்கள். இந்திய சினிமா பொருத்தவரையில் அனிமேஷன் படம் இன்னும் பொம்மை படமாகவே இருந்து வருகிறது.

இதற்கு முன் சில அனிமேஷன் படங்களை தமிழில் எடுத்து அதில் தோல்வியும் கண்டிருக்கின்றனர். இதனால் யாருமே அனிமேஷன் என்ற துறைக்குள் நுழைய முன் வராதபோது, ரஜினி என்கிற சூப்பர் ஸ்டாரை வைத்து அனிமேஷன் படம் எடுத்தால் அது எல்லா தரப்பு மக்களையும் சென்று அடையும் என்று எண்ணி எடுத்த படம் தான் சுல்தான்.
ஆனால் சில காரணங்களால் அப்படம் இன்னும் முடிக்காமல் இருக்கிறார்கள், இருந்தாலும் தன் அனிமேஷன் கனவை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று கோச்சடையான் என்ற புதிய படம் எடுத்திருக்கின்றனர்.

படத்தின் டிரெய்லரை பார்த்த நிறைய பேர் அந்த ஒரிஜினல் ரஜினியை இதில் கற்பனை பண்ணி பார்க்கமுடியவில்லை என்று காது பட பேசினர். ஆனால் இவர்கள் அனைவருக்கும் ஒன்று சொல்ல ஆசைபடுகிறேன். ஹாலிவுட்டை விட நாம் 20 வருடங்கள் பின் தங்கியே உள்ளோம். அதுமட்டுமல்லாமல் அவதார் படத்திற்கு 1000 கோடி டாலர்களும், டின் டின் படத்திற்கு 2000 கோடி டாலர்களும் செலவழித்திருந்தார்கள்.

இங்கே அதை கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவுக்கு பொருளாதார நிலை உள்ளதும் ஒரு காரணம். அவர்கள் உபயோகித்து அலுத்துபோன விஷயத்தைத் தான் நாம் இங்கு கொண்டு வருகிறோம். நிலைமை இப்படியிருக்க ஹாலிவுட்டிற்கே சவால் விடும் வகையில் 125 கோடியில் ஒரு அனிமேஷன் படம் எடுத்திருக்கும் சௌந்தர்யாவை வரவேற்க வேண்டும்...

நம்ம படத்த நாம சப்போர்ட் பண்ணலைன்னா யாரு பண்ணுவாங்க சொல்லுங்க...!

0 comments

Post a Comment