Tuesday, 27 August 2013

தனுஷ் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் "காக்கா முட்டை"

thanus-thayaripil-simbu-nadikkum-kakka-muttai
தனுஷின் சொந்த நிறுவனம் Wunderbar Films மற்றும் வெற்றிமாறனின் Grass Root Films நிறுவனமும் சேர்ந்து தயாரித்துள்ள  படம் "காக்கா முட்டை". இந்த படத்தில் குழந்தைகளின் வாழ்க்கை குறித்த கதை சொல்லப்பட்டுள்ளது.


இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுந்தரபாண்டியன் இயக்குனர் மணிகண்டன் இந்த படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் பிரபல நடிகர் ஒருவரின் கேரக்டர் வருகிறது. இந்த கேரக்டரில் யார் நடிப்பது என்ற கேள்வி எழுந்த போது தனுஷ், "இந்த கேரக்டருக்குச் சிம்பு பொருத்தமாக இருப்பார் அவரை கேட்டுப்பாருங்கள்" என இயக்குனர் மணிகண்டனுக்கு ஆலோசனை வழங்கினார்.

தனுஷ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிம்பு நடிப்பாரா? என்ற கேள்வி கோலிவுட்டில் எழுந்த நிலையில் சிம்பு மறுப்பேதும் சொல்லாமல் உடனே நடித்துக் கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

சிம்பு நடிகராகவே தோன்றும் காட்சிகள் படத்தில் ஐந்து நிமிடங்கள் வருகிறதாம்.

0 comments

Post a Comment