ஹீரோவாக களம் இறங்கும் லொள்ளு சபா மூலம் பிரபலமான நடிகர் ஜீவா. கடந்த ஆண்டு, டூ படத்தை இயக்கிய ஸ்ரீராம் பத்மநாபன் அடுத்து "மாப்பிள்ளை விநாயகர்" என்ற படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தில் ஜீவா ஹீரோவாக நடிக்கவுள்ளார். ஜீவாவுடன் பாக்யராஜ், ஊர்வசி, வாட்சன் ஆகியோருடன் சந்தானமும் முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார். டூ படத்திற்கு இசையமைத்த அபிஷேக்-லாரன்ஸ் ஆகிய இருவருமே இப்படத்திற்கும் இசையமைக்க இருக்கின்றனர்.
மாப்பிள்ளை விநாயகர் படம் முழுக்க காமெடி படமாக உருவாக இருக்கிறது. தற்போது கதாநாயகிக்கான தேடுதல் நடந்து வருகிறது. மே மாத இறுதியில் இப்படத்தின் சூட்டிங் ஆரம்பமாக இருக்கிறது.
0 comments
Post a Comment