தமிழ் திரைப் படங்களுக்காக நடத்தப்படும் ஒரே விழாவான நார்வே திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது. நார்வேயின் ஆஸ்லோ மற்றும் லொரன்ஸ்கூ நகரங்களில் 25ம் தேதி முதல் வருகிற 29ம் தேதி வரை இத்திரைப்பட விழா சிறப்பாக நடைபெற இருக்கிறது.
24ம் தேதி முதல் 28ம் தேதி வரை 10 தமிழ் திரைப்படங்களும், 25 மற்றும் 26 தேதிகளில் 20 குறும்படங்களும் திரையிடப்பட இருக்கின்றன. நிறைவு நாளான 29 தேதி தமிழர் விருதுகள் வழங்கும் விழா நடக்கிறது. மேலும் பார்வையாளர்களை கவரும் வகையில் இன்னிசை விருந்து நிகழ்ச்சியும் நடக்கிறது.
கவுரவ் இயக்கத்தில் விமல் - அஞ்சலி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பாராட்டுக்களைப் பெற்ற தூங்கா நகரம் திரைப்படம் இந்த ஆண்டு நார்வே தமிழ் திரைப்பட விழாவின் சிறப்புத் திரையிடலுக்கு தேர்வாகி உள்ளது. சுபாஷ் கலியன் இயக்கத்தில் "பாலம் கல்யாணசுந்தரம்" அய்யா அவர்களின் ஆவணப்படமும் இந்த விழாவில் சிறப்பு திரையிடலுக்கு தேர்வாகி உள்ளது. மேலும் இந்த விழாவில் பங்கேற்க 50க்கும் மேற்பட்ட குறும்படங்கள் அனுப்பப்பட்டு அதிலிருந்து 20 குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
0 comments
Post a Comment