Monday 14 March 2011

ஆடு புலி விமர்சனம்


கதைப்படி கதாநாயகன் ஆதிக்கு,  கதாநாயகி  பூர்ணா மீது காதல். அந்த காதலுக்கு பூர்ணாவும் பச்சைக் கொடி காட்ட ஆதியின் குடும்பமும் பச்சைக் கொடி காட்டுகிறது. ஆனால் இவர்களது காதலுக்கு முதல்வர் ஆகத்துடிக்கும் அமைச்சர் ஒருவரிடமிருந்து எதிர்ப்பு வருகிறது.  ஆதி-பூர்ணாவின் காதலுக்கு அமைச்சரிடமிருந்து எதிர்ப்பு இடையூறு வரக்காரணம் என்ன...? அதை மீறி ஆதி-பூர்ணாவை கைப்பிடித்தாரா...? இல்லையா என்பதுதான் ஆடுபுலி  படத்தின் கதை.


பிரபு, ரவிச்சந்திரன், கே.ஆர்.விஜயா உள்ளிட்ட சீனியர் நட்சத்திரங்களும் படத்தில் இருப்பது சூப்பர்! ஆனால் இவர்கள் எல்லோரையும் விட அகிம்சையும், அடாவடியும் ஒருங்கே கொண்டர் மினிஸ்டர் தில்லை நாயகனாக வரும் மாஜி நாயகர் சுரேஷூம், அவரது உதவியாளர் மயில்சாமியும் பண்ணும் கலாட்டா தியேட்டரை அதிரவைக்கிறது.

சுந்தர்.சி.பாபுவின் இசையும், ராஜவேலின் ஒளிப்பதிவும் விஜய்பிரகாஷின் எழுத்து இயக்கத்தில் ஆடுபுலியை வேட்டை புலியாக மாற்றுகிறது.

0 comments

Post a Comment