Thursday 17 March 2011

சீடன் விமர்சனம்

முதலாளி மகனுக்கும்  வேலைக்கார பெண்ணுக்கும் மலரும் காதலை தனுஷ் சேர்த்து வைப்பதே படத்தின் கதை... செம்மீன் ஷீலா பழனியில் வசதி படைத்தவர். அவர் வீட்டில் சமையல் வேலை செய்கிறார்
 அனன்யா. இளைஞன் ஒருவருடன் திருமணம் நடப்பது போல் அனன்யா கனவு காண்கிறார்.

அதே இளைஞன் ஷீலா வீட்டில் திடீர் என்று வந்து நிற்கிறான். அவன் ஷீலாவின் பேரன் ஜெய்கிருஷ்ணா என தெரிய. அனன்யா அழகில் ஜெய்கிருஷ்ணா மயங்கி காதல் வலையில் விழுகிறார் அனன்யாவும் காதலை ஏற்கிறார்.

ஜெய்கிருஷ்ணாவுக்கு உறவினர்கள் வேறு பணக்கார பெண்ணை
நிச்சயிக்கின்றனர். அனன்யா நொறுங்குகிறார்.அந்த வீட்டுக்கு பழனி கோவில் சரவணன் என்ற பெயரில் தனுஷ் சமையல்காரராக வருகிறார். அவர் அனன்யா காதலுக்கு உதவுவதாக வாக்குறுதி அளிக்கிறார்.

ஷீலா குடும்பத்தினருக்கு அனன்யா காதல் விஷயம் தெரிய ஆவேசமாகின்றனர். வீட்டை விட்டு துரத்த முயற்சிக்கின்றனர். காதல் நிறைவேறியதா.  என்பதுதா கிளைமாக்ஸ்... அனன்யா காதல் சமாசாரமாக நகரும் கதை ஜெய்கிருஷ்ணாவுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் ஏற்பாடானதும் பற்றிக் கொள்கிறது.

தனுஷ் சமையல்காரராக அறிமுகமானதும் இன்னும் வேகம்... சிரித்த முகம், அவ்வப்போது மஜிக்  வித்தைகளால் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துக்கிறார். கிளைமாக்சில் அவர் யார்.  என்ற சஸ்பென்ஸ் உடைவது வித்தியாசம்.  அனன்யா அழகில் ஜொலிக்கிறார்.

 போலி சாமியாராக வரும் விவேக் சிரிப்பு தோரணம் கட்டுகிறார்.
பழனி கோவில் பின்னணியில் குடும்ப சென்டிமெண்ட், காதலை  அருமையாக காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குனர் சுப்பிரமணியம் சிவா. அதற்கு தினாவின் பின்னணி இசை அருமை..

0 comments

Post a Comment