Monday, 28 February 2011

VARMAM

தனது தங்கை நந்தினி சாவுக்கு காரணமானவர்களை பழி தீர்க்கும் அண்ணன் கதை... 

          சிவா, கிராமத்து இளைஞன். தங்கை நந்தினியை பட்டினத்துக்கு படிக்க அனுப்புகிறான். விடுதியில் தங்கும் அவளை விபசார தொழில் செய்யும் சாமி கடத்துகிறான். பாலியல் பலாத்காரம் செய்து அவளை கொன்றும் விடுகிறான். அண்ணன் சிவா தகவல் தெரிந்து துடிக்கிறான். தங்கையை கொன்றவர்களை பழி தீர்க்க புறப்படுகிறான். ஒரு வீட்டில் தங்கி பகலில் வேலை பார்க்கிறான்.


இரவு நேரத்தில் பெண் வேடமிட்டு வில்லன்களை தேடிபிடித்து வதம் செய்கிறான். சிவாவாக வரும் அகிலன் பாசக்கார அண்ணன். ஆக்ஷனில் அனல் பறக்க வைக்கிறார். பெண் வேடத்தில் ஒவ்வொருவரையும் போட்டுத் துள்ளுவது மிரட்டல். அனகா விரட்டி விரட்டி காதல் செய்கிறார். பைக்கில் சேறு அடித்து போகும் அகிலனை மடக்கி பிடித்து அவர் வீட்டுக்கே சென்று டிரெஸ்ஸை அவிழ்த்து துவைக்க சொல்வது கலகலப்பு. கிரன் மனோகர், பரோட்டா சூரி, சிசர் மனோகர் சிரிக்க வைக்கின்றனர்.

வில்லனாக பாலாசிங், நிழல்கள் ரவி, மீரா கிருஷ்ணன், புவனா ஆகியோரும் உள்ளனர். ஒரு பெண் பெரிய ஆட்களை தீர்த்துக்கட்டுவது போல் கதையை ஆரம்பித்து காட்சிகளை விறு விறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் ஏ.எஸ். லாரன்ஸ் மாதவன். திருநங்கைகள் சீன்களும் அவர்கள் பேசும் வசனங்களும் சலிப்பு. மீராலால் இசையில் பாடல்கள் இதம்.

0 comments

Post a Comment