Monday 28 February 2011

NADUNISI NAAYGAL

 அம்மாவை இழந்து தவிக்கும் வீரா, வீட்டில் பெண்களை அழைத்து விபச்சாரத்தில் ஈடுபடும் மோசமான அப்பாவின் பராமரிப்பில் வளர்கிறான். சிறு வயதிலேயே அவரது வக்கிரமங்களை பார்த்து மனம் பாதிக்கப்படுகிறான். அவ்வீட்டில் போலீஸ் சோதனையிட அவர் தன்னைத்தானே சுட்டு கொள்கிறார். சிறு வயதில் அனாதையான அவனை பக்கத்து வீட்டு பெண் மீனாட்சி தத்து எடுத்து வளர்க்கிறாள். பெரியவனானதும் ஒருநாள் அவளையே வீரா பலவந்தப்படுத்தி கெடுத்துவிடுகிறான். அதிர்ச்சியாகும் அப்பெண் மறுநாள் தன்னை  காதலிக்கும் ஒருவனை பதிவு திருமணம் செய்து அழைத்து வருகிறாள். முதல் இரவில் படுக்கையிலேயே அவனை குத்தி கொல்கிறான் வீரா.


அப்போது  ஏற்படும் தீ விபத்தில் மீனாட்சி இறந்து விடுகிறாள். அவள் உடலை சென்னையில் ஒரு மர்ம பங்களாவில் அடக்கம் செய்கிறான். மீனாட்சி உயிருடன் இருப்பதுபோல் நினைத்து கற்பனையாக அவளுடன் வாழ்கிறான். சிறு வயதில் தன்னுடன் படித்த ப்ரியாவையும் கடத்தி வருகிறான். அவள் தப்பினாளா என்பது திக்... திக்... கிளைமாக்ஸ்...

சைக்கோ இளைஞனின் வாழ்வியலை திகிலான திரைக்கதையில் விறு விறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் கவுதம் வாசுதேவமேனன். சிரிப்பு, பேச்சு நடவடிக்கை அனைத்திலும் சைக்கோத்தனத்தை பிரதிபலிக்கிறார் வீரா. மீனாட்சியம்மா பயமா இருக்கு என்று நடுங்கியபடி கால்களை கட்டிபிடித்து கதறுவதும் பிறகு அவளையே பலாத்காரம் செய்வது பயங்கரம். பங்களாவில் பெண்களை கொன்று அமிலத்தில் மூழ்கடிப்பது... போலீசாரை கொன்று சமீராரெட்டியை கடத்துவது... திகில்...
 சைக்கோவிடம் சிக்கி தப்பிக்க போராடும் போது சமீராரெட்டி ரத்தத்தை உறைய வைக்கிறார். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு நள்ளிரவில் நடக்கும் சம்பவங்களை படம்பிடித்துக் காட்டுகிறது. பின்னணி இசை இல்லாமல் யதார்த்த சப்தங்களை பயன்படுத்தி இருப்பது புதுமை...

0 comments

Post a Comment