Wednesday, 2 February 2011

ரஜினிக்காக அக்ஷய்!
ரஜினியின் அடுத்த படமான ராணாவில் நடிப்பதற்குகால்ஷீட் தர வசதியாக, தான் அடுத்து அக்ஷய்குமாருடன் நடிப்பதாக இருந்த படத்தைக் கூடமறுத்துள்ளார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்.


தென்னக சூப்பர் ஸ்டாராக இருந்து, இப்போது இந்தியசூப்பர் ஸ்டாராகவும், உலக அளவில் அறியப்பட்டஇந்திய நாயகனாகவும் மாறியுள்ள ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடித்துவிடவேண்டும் என்பதே இன்றைய இளம் நடிகைகளின் ஆசையாக உள்ளது.


பிரபல பாலிவுட் நாயகி தீபிகா படுகோனும் இதற்கு விலக்கல்ல. கடந்த இரு ஆண்டுகளாகவே அவர் ரஜினி பட வாய்ப்புக்காக காத்திருந்தார்.

இந்த நிலையில் கே எஸ் ரவிக்குமார் இயக்கும் ரஜினியின் புதிய படமான ராணாவில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவரைத் தேடிவந்தது. ஆனால் அந்த நேரம் பார்த்த அவரிடம் கால்ஷீட் இல்லை. ரஜினி படத்தை தவற விடவும் மனமில்லை.

கடைசியில் அக்ஷய் குமாருடன் தான் நடிக்கவிருந்த ஒரு படத்தை வேண்டாம் என்று கூறிவிட்டு, ரஜினி படத்துக்கு கால்ஷீட் தரத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார் தீபிகா!

இப்படத்தில் ரஜினியின் இன்னொரு நாயகியாக அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்படுகிறது.

0 comments

Post a Comment