Sunday 20 February 2011

திடுக்கிட வைக்கும் பயணம்




பயணிகள் விமானம் ஒன்று சென்னையில் இருந்து டெல்லி செல்கிறது. அதை தீவிரவாதிகள்  கடத்துகின்றனர். தங்கள்  சதித்திட்டத்தின்படி பாகிஸ்தான் கொண்டு போக முயற்சி செய்கின்றனர்.  பைலட் அறைக்குள் நடக்கும் சண்டையில் ஒரு என்ஜின்  பழுதாக விமானம் அவசரமாக திருப்பதியில் தரையிறங்குகிறது. விமான பயணிகளை பணய கைதிகளாக்கி உள்துறை  செயலாளர் பிரகாஷ்ராஜுடன் பேச்சு நடத்துகின்றனர். ஜெயிலில் உள்ள தீவிரவாத தலைவன் யூசுப்கானை விடுதலை செய்ய  வேண்டும் என்றும் பாகிஸ்தான் தப்பி செல்ல தனி விமானம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கின்றனர்.
 மீறினால் விமானத்தை குண்டு வைத்து தகர்ப்போம் என்று மிரட்டுகின்றனர்.

விமானத்தை சுற்றி நாகார்ஜுன் தலைமையில் அதிரடிப்படை குவிக்கப்படுகிறது. பயணிகளை பத்திரமாக மீட்க தீவிரவாதிகளின்  கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கிறது. காஷ்மீரில் இருந்து யூசுப்கானை அழைத்து வரும்போது அவன் பனி சரிவில் வேன்  விபத்துக்குள்ளாகி சாகிறான். அதை மறைத்து தீவிரவாதிகளுடன் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.  அவர்கள் பாகிஸ்தான் புறப்பட விமானம் வர வழைக்கப்படுகிறது. இன்னொரு புறம் தீவிரவாதிகளை வீழ்த்த அதிரடிப்படை  வீரர்களுடன் நாகார்ஜுனா செல்கிறார். பயணிகள்

காப்பாற்றப்பட்டார்களா?  என்பதை படத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்ல £மல்  ஒன்ற வைக்கிறார் இயக்குனர் ராதாமோகன்.

 
கமாண்டோ அதிகாரி கெட்டப்பில் மிடுக்காக வருகிறார் நாகார்ஜுனா. காஷ்மீரில் யூசுப்கானை பிடிக்கும் போதம்... தீவிரவாதிகளை  ஏமாற்ற துணை நடிகருக்கு யூசுப்கான் வேடமிட்டு சி.டி. அனுப்பி நம்ப வைக்கும்போதும் தனது திறமையான நடிப்பை  வெளிப்படுத்தி இருக்கிறார்.  உயர் அதிகாரியாக வரும் பிரகாஷ்ராஜ் அழுத்தமான முத்திரையைப் பதிக்கிறார். விமான  பயணிகளில் ஒருவராக வரும் பிருதிவிராஜ் , சனாகான் வந்து போகின்றனர்.
 
கடத்தல் விமானத்துக்குள் உள்ள பயணிகள் முகங்களில் பீதியை இன்னும் கொஞ்சம் கூட்டி இருக்கலாம், பிரவீன் மணி  இசையும் கே.வி.குகன் ஒளிப்பதிவும் படத்தை தூக்கி நிறுத்துகின்றன,

1 comments: